திருப்புவனம், ஜூன் 6: திருப்புவனம் அருகே கலியாந்தூர் செல்லும் வழியில் கொம்பையா கோயில் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையால் வயல் வெளிகளில் குடிமகன்கள் பாட்டில்களை உடைத்து போடுகின்றனர்.
மண்டல மேலாளரிடம் புகார் அளித்தும் பயனில்லை. இதனால் அ.வெள்ளிக்கரை, தி.நெல்முடிகரை விவசாயிகள் வருகிற 10ம் தேதி டாஸ்மாக் கடை முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என விவசாய சங்க நிர்வாகிகள் அக்கினி ராஜா, தர்ம பிரபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
