சேந்தமங்கலத்தில் தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம்

சேந்தமங்கலம்,  மார்ச் 6: சேந்தமங்கலத்தில், சட்டமன்ற தேர்தல்  விதிமுறை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர்  சுகுமார் தலைமை வகித்தார். இதில் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள  திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்கள்  கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஓட்டல், விடுதி மற்றும் திருமண மண்டபங்களை  அரசியல் கட்சியினர் வாடகைக்கு எடுத்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க  வேண்டும். திருமணம், காது குத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பெயரில்  மண்டபத்தில் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள், வேட்டி, சேலைகள்  இருப்பு  வைக்கவும், வாக்காளர்களுக்கு வைக்கவும் உரிமையாளர்கள் அனுமதிக்கக்கூடாது. மேலும், அச்சக உரிமையாளர்கள் தேர்தல் பிரசார நோட்டீஸ் அச்சிடும் போது,  அதில் கண்டிப்பாக அச்சகத்தின் பெயர், தொலைபேசி எண் பதிவு செய்யவேண்டும். வெளியூர் நபர்களுக்கு மண்டபத்தை வாடகைக்கு விடும்போது,  அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை கண்டிப்பாக கேட்டுப்பெற வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் சந்திரன், திருமண மண்டபம், அச்சக உரிமையாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: