நாமக்கல்லில் வரும் 12ம்தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின்கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ அறிக்கை

திருச்செங்கோடு, மார்ச் 6:நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல்லில் வருகிற 12ம்தேதி நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழச்சியில் கலந்துகொள்ள, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிறார். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், தொண்டர்களுடன் திரளாக கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: