மத்தியப்பிரதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகி பர்கத்துல்லா பல்கலைக்கழக பெயரை மாற்றிய பாஜ அரசு

 

போபால்: மத்தியப்பிரதேசத்தில் சுதந்திர போராட்டதியாகி பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பெயரை அம்மாநில பாஜ அரசு மாற்றியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி மவுலானா முகமது பர்கத்துல்லா போபாலி. போபாலில் 1970ம் ஆண்டு தொடங்கப்பட்ட போபால் பல்கலைக்கழகம், தியாகி மவுலானா முகமது பர்கத்துல்லாவை பெருமைப்படுத்தும் விதமாக, 1988ம் ஆண்டு பர்கத்துல்லா பல்கலைக்கழகம் என அப்போதைய அரசு பெயர் மாற்றம் செய்தது. இந்நிலையில் சில அரசியல் கட்சி தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில் ‘வாக்தேவி’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்தேவி, இந்து மத கடவுளான சரஸ்வதியை குறிக்கிறது.

மேலும் இந்து மன்னரான போஜராஜன், போஜ்பால் என்றும் அழைக்கப்படுகிறார். 11ம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவின் மால்வா பிராந்தியத்தை மன்னர் போஜராஜன் ஆண்டுள்ளார். அவர்தான் போபால் நகரத்தை நிறுவினார் என்றும் கூறப்படுகிறது. எனவே, போபால் நகரின் வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நோக்கில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போபாலில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு முக்கிய இடங்களின் பெயர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: