பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு ம.பி. துணை ஆட்சியர் கைது

மொரேனோ: மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தின் துணை ஆட்சியர் மீது பெண் ஒருவர் சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில், அதிகாரியை தான் பேஸ்புக் மூலம் சந்தித்ததாகவும் பின்னர் இருவரும் தொலைபேசி வாயிலாக பேசத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். துணை ஆட்சியர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த பெண்ணும் சம்மதித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி அந்த துணை ஆட்சியர் தன்னை காரில் ஓய்வு இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தனது விருப்பத்திற்கு மாறாக தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் துணை ஆட்சியரை கைது செய்தனர்.

Related Stories: