தேர்தலுக்கு முன் திமுகவிடம், தேர்தலுக்கு பின் தவெகவிடம் ராஜ்யசபா சீட் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்பி சீட்டை காங்கிரசுக்கு தவெக ஒதுக்கி தந்தது. கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி தவெகவுக்கு அழைத்து வந்ததை பாராட்டி பிரவீன் சக்கரவர்த்திக்கு எம்பி பதவி வழங்க தவெக தலைமை முடிவு செய்திருந்தது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுக்கு யார் வேட்பாளர் என்பதை தவெக எப்படி முடிவு செய்யலாம் என்ற கருத்து மோதல் காங்கிரசில் எழுந்தது.

கட்சிக்காக உழைத்த பலர் இருக்கும் போது, வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தியை முன் நிறுத்துவது சரியல்ல என்று மூத்த தலைவர்கள் நேரடியாகவே போர்க்கொடி தூக்கினர். ஆனால் இவர்களின் எதிர்ப்பை எல்லாம் காங்கிரஸ் மேலிடம் கண்டுகொள்ளவே இல்லை. தமிழக ராஜ்யசபா சீட்டுக்கு காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்கரவர்த்தி போட்டியிட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் வழங்கியுள்ளார் என பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அறிவித்தார்.

இதுதவிர, 3 பேர் கொண்ட கர்நாடக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, பவன் கேரா, மன்சூர் அலிகான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச வேட்பாளராக மீனாட்சி நடராஜன், ராஜஸ்தான் வேட்பாளராக நீரஜ் டாங்கி, ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் வேட்பாளராக பிரணவ் ஜா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: