ஆம்பூர், ஜூன் 4: ஆம்பூர் கஸ்பா- ஏ திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மன் சிரசு ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆம்பூர் கஸ்பா- ஏ பகுதியில் பழமையான திருப்பதி கெங்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைகாசி மாதத்தையொட்டி அம்மன் சிரசு திருவிழா நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. வளையல்கார தெருவில் தொடங்கிய அம்மன் சிரசு ஊர்வலம் கஸ்பா மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.
ஆம்பூர் கஸ்பா- ஏ பகுதியில் திருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
- திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊர்வலம்
- அம்பூர் கஸ்பா-ஏ
- ஆம்பூர்
- அம்பூர் கஸ்பா-
- திருப்பதி
- கங்கை அம்மன்
- திருப்பதி கங்கையம்மன்
