சென்னை: அதிமுக எம்பி இன்பதுரை நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறி இருப்பதாவது: பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்? மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா?.
அரசு பாதுகாப்பு அமைப்புகளை சாராத ஒருவர், ‘பாதுகாவலர்’ என்ற பெயரில் அவரது நிழலாக தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்புடையதா? அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்? இந்த முக்கிய கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்குமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
