சென்னை: சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் கார் அதிவேகமாக சென்று பொதுமக்கள், வாகனங்கள் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை விரட்டிச் சென்று வேளச்சேரி செக்போஸ்ட் அருகே மடக்கிப்பிடித்தனர். காரில் மதுபோதையில் வந்த பெண், நண்பர்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
