சென்னை: அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடைபெற உள்ள ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 18.5.2026 (திங்கட்கிழமை) முதல் 30.5.2026 (சனிக்கிழமை) வரையிலான நாட்களிலும், சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல் முறையில்) 1.6.2026 (திங்கட்கிழமை) மற்றும் 2.6.2026 (செவ்வாய்க்கிழமை) வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் 3.6.2026 (புதன்கிழமை) மற்றும் 4.6.2026 (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது.
