மாநில கூடைப்பந்து போட்டி துவக்கம்

கரூர், மார்ச் 5: கரூரில் நான்கு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நேற்று துவங்கியது. கரூர் டெக்ஸ்சிட்டி கூடைப்பந்து கழகம் மற்றும் மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியவற்றின் சார்பில் ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நேற்று மாலை கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்த போட்டிக்கான துவக்க விழாவிற்கு மாவட்ட கூடைப்பந்து கழக துணைத்தலைவர் வீரதிருப்பதி வரவேற்றார். தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 7ம் தேதி மாலை நடைபெறுகிறது.

போட்டிக்கான ஏற்பாடுகளை கூடைப்பந்து கழக செயலாளர் செந்தில்குமார் செய்துள்ளார்.

Related Stories:

>