நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பூப்பல்லக்கில் அம்மன் வீதியுலா

நத்தம், மார்ச் 5: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து கோயிலில் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்கினர். விழா நாட்களில் அம்மன் பல வாகனங்களில் எழுந்தருளினார் முக்கிய திருவிழாவான பூக்குழி இறங்குதல் கடந்த 2ம் தேதி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, கரும்பு தொட்டில், அரண்மனை பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று முன்தினம் காலை அம்மன் மஞ்சள் நீராடுதல் வைபவம் நடந்தது. இரவில் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். குளத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வந்து கோயிலை அம்மன் அடைந்தார். இத்துடன் மாசித்திருவிழா நிறைவு பெற்றது.

Related Stories: