விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கான இயக்கம்

திருப்பூர்,மார்ச்4:விவசாயிகளின்  விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதற்கான முயற்சியை உயிர் பார்மர்ஸ் புரடியூசர் கம்பெனி லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மேலும் விவசாயிகளின் விளை பொருள்களிலிருந்து மதிப்புக்கூட்டிய பொருள்களை தயார் செய்து நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் முயற்சியிலும் இந்நிறுவனம் இறங்கியிருக்கிறது.ஆரோக்கியமான புரோட்டீன் ஹெல்த் மிக்ஸ், வெர்ஜின்ஆயில், செக்குதேங்காய்எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை,சாம்பார் பொடி, ரசப்பொடி, மசாலா பொடிகள், பருப்பு பொடிகள், இப்படி ஏராளமான மதிப்பு கூட்டிய பொருட்களை உற்பத்தி செய்து இந்நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில் ஏராளமான விவசாயிகள் இணைந்து கொண்டிருக்கிறார்கள். எந்தவிதமான கெமிக்கல் கலக்காமல் இயற்கையான முறையில் தயார் செய்து  நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்கின்ற முயற்சியில் இறங்கி இருக்கிறது. அதற்காக அனைத்து பகுதிகளிலும் பிரான்சிஸ் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிறுவனத்தின் பிரான்சிஸ் ஏற்று நடத்த விருப்பமுள்ளவர்கள் 7010552715,9942050584 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories:

>