×

எபோலா தொற்று இருந்தால் 14 நாட்கள் தனிமை: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

நாமக்கல்: எபோலா தொற்று இருந்தால் 14 தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். நாமக்கல்லில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை போக்கு பிடிக்காததால், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர். அவர்களை நாங்கள் அரவணைக்கிறோம்.

அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர், தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளரை சூழ்ச்சி செய்து எடப்பாடி பழனிசாமி தேர்தலில் போட்டியிட செய்ய விடாமல் தடுத்து விட்டார். தவெக வேட்பாளர் அங்கு போட்டியிட்டிருந்தால், தவெக தான் வெற்றி பெற்றிருக்கும். கடந்த காலங்களில் எப்போதுமே, எடப்பாடி பழனிசாமி நேர்வழியில் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை.

ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டா ஆகிய நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸை, உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்றாக அறிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச விமான நிலையங்களில், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்து, தொற்று அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அவர்களுக்கு எபோலா தொற்று இல்லை என்றாலும், வெளிநாடுகளில் அவர்கள் தொடர்பில் இருந்தவர்களுடன் இருந்தால், 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகப்பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை எபோலா வைரஸ் தொற்று அல்லது அறிகுறி எதுவும் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags : Minister ,Arunraj ,NAMAKAL ,Tamil ,Nadu ,Minister of Medicine and Public Welfare ,Supreme Secretary ,Eadapadi Palanisami ,Akhatsi ,
× RELATED வால்பாறை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு