×

வால்பாறை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு

 

 

வால்பாறை: வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மீன்பாறை பகுதியில் உடல் நலக்குறைவால் பெண் சிறுத்தை உயிரிழந்தது. கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா மானாம்பள்ளி அடுத்த மீன்பாறை பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் ஒன்றரை வயதான பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் பொள்ளாச்சி துணை இயக்குநர் உத்தரவின் பேரில், உதவி வனப்பாதுகாவலர்,

வனப்பாதுகாப்புப்படை அதிகாரிகள் மற்றும் மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் தலைமையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனக்கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் மெய்யரசன் மற்றும் வால்பாறை கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் தர்மராஜ் ஆகியோர் சிறுத்தையை உடற்கூராய்வு செய்தனர். இதில் சிறுத்தை தனது இரைக்காக வேட்டையாட முயன்றபோது ஏற்பட்ட காயங்களால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், சிறுத்தையின் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவ இடத்திலேயே சிறுத்தையின் உடல் முழுமையாக எரியூட்டப்பட்டது.

Tags : Walpara ,Manampalli Wildlife Area ,Valpara ,Mundinam ,Gowai district ,Valpara Taluga Manampalli ,
× RELATED தமிழகம் முழுவதும் இந்து சமய...