×

புதுக்கோட்டையில் அமைச்சர் ஆய்வின் போது மின்வெட்டு

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்ததிலிருந்தே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்படைவதாக தெரிவித்து பல இடங்களில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை பாலன் நகர் அருகே ஐடிஐ பின்புறம் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதலில் தொழிலாளர் நல சங்க நிர்வாகிகளை சந்தித்த அமைச்சர், அரசு முத்திரையுடன் கூடிய எடை கற்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது 20 நிமிடங்களுக்கு மேலாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் மின்வெட்டால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் அந்த அலுவலகமே இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் அதிகாரிகள் சிலர் மின்விசிறி இல்லாததால் பேப்பரை வைத்து வீசும் நிலையும் ஏற்பட்டது. பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், ஆய்வை தொடர்ந்து வந்த அமைச்சர் ஆய்வு முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

Tags : Pudukkottai ,Tamil Nadu ,Chennai ,Labor Welfare Department ,ITI ,Balan Nagar ,Pudukkottai… ,
× RELATED உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 5...