சென்னை: தவெக அரசு, ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும் என்பது சட்ட மேதை அம்பேத்கரின் மணி வாசகங்களில் ஒன்று.
மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் வரை சென்று பெறப்பட்டுள்ள தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசு முன்வர வேண்டும் என்றும் மாநிலங்களில் அரசு மாறலாம், ஆனால் மாநில உரிமைகள் என்பதும், கூட்டாட்சி என்பதும் அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகளாகும்.
இதில் சமரசத்திற்கு இடமில்லை என்றும் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசு ஊசலாட்டம் கூடாது என்றும் அக்கட்சி கூறி இருக்கிறது. இதனிடையே மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுக்க கோரி இடதுசாரி கட்சிகள் சார்பில் தஞ்சாவூரில் வரும் 29ஆம் தேதி கண்டனம் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
