மூவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திருச்சி, மார்ச் 4: திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் அருகே கடந்த 7ம் தேதி கஞ்சா விற்ற ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த கருணாமூர்த்தி(43) என்பவரை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் விற்பனை பணம் 390 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து குற்றம் செய்யும் நோக்கிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக இருப்பதையடுத்து கருணாமூர்த்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் கோசலைராமன் பரிந்துரைத்தார். இதனை அடுத்து சிறையில் உள்ள கருணாமூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று முன்தினம் மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள கருணாமூர்த்தியை குண்டாசில் கைது செய்த போலீசார் இதற்கான நகலை ஒப்படைத்தனர்.

திருச்சி கன்டோன்மென்ட், பாரதியார் சாலையில் கடந்த 9ம் தேதி கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மலைப்பட்டியை சேர்ந்த ரஜினிகாந்த் (47) என்பவரை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சுமார் 2.900 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ெதாடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே ராம்ஜிநகர் காவல்நிலையத்தில் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரிந்தது. இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ரஜினிகாந்தை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் பரிந்துரைத்தார். இதனையடுத்து சிறையில் உள்ள ரஜினிகாந்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். சிறையில் உள்ள ரஜினிகாந்த்தை குண்டாசில் கைது செய்த போலீசார் இதற்கான நகலை ஒப்படைத்தனர்.

இதேபோல திருச்சி பாலக்கரை காவல் நிலைய ஏட்டு வேல்முருகன் என்பவரை குற்ற வழக்கில் கைதாகாமல் தலைமறைவாக இருந்த சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகர் விஜய்(23), இவரது நண்பர் யுவராஜ்(21). இருவரும் அவரை இரும்பு ராடால் தாக்கி தப்பினர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஏற்கனவே சிறையில் உள்ள விஜய் குண்டாசில் அடைக்கப்பட்டுள்ளார். இதில், யுவராஜை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பொன்மலை இன்ஸ்பெக்டர் பரிந்துரைத்தார். இதனை ஏற்ற கமிஷனர் லோகநாதன், சிறையில் உள்ள யுவராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை குண்டாசில் கைது செய்யப்பட்டார்

Related Stories: