தேர்தல் பயிற்சி முகாம்

திருமங்கலம், மார்ச் 4: திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதி மண்டல மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு நேற்று தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.திருமங்கலம் தொகுதியில் 402 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. தேர்தலையொட்டி இதில் பணிபுரிய உள்ள மண்டல மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் முத்துபாண்டியன் கலந்து கொண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள், குறித்து ஆலோசனை கூறினார்.

Related Stories: