மண்டல அளவிலான தபால்துறை குறைதீர் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 4: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் அலுவலக மேற்கு மண்டல அலுவலகத்தில், வருகிற 10ம் தேதி மண்டல அளவிலான தபால்துறை சார்ந்த குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடக்கிறது. அஞ்சலக வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், புகார்களை தலைமை தபால் நிலையம். ஆர்.எஸ்.புரம், கோயமுத்தூர் 641 002 விலாசத்திற்கு சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.  புகார்களில் தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் குறிப்பிட வேண்டும். பதிவு தபால், எம்.ஓ, வி.பி., இன்சூர்டு லெட்டர் மற்றும் விரைவு தபால் ஆகியவற்றுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் குறிப்பிட வேண்டும். அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண் / பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவர் / காப்பீட்டாளரின் பெயர் மற்றும் விலாசம், அஞ்சல் அலுவலகத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விபரம் போன்றவை குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>