மகளுடன் இளம்பெண் கடத்தல்

கிருஷ்ணகிரி, மார்ச் 4: மகளுடன், இளம்ெபண்ணை கடத்தியதாக டிராக்டர் டிரைவர் மீது கணவர் புகார் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி நாகரசம்பட்டி அடுத்த கனவாய்முல்லை கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (40). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி ஜெயமாலினி (30). இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மகளுடன் வெளியே சென்ற ஜெயமாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து கன்னியப்பன் நாகரசம்பட்டி போலீசில் அளித்த புகாரில், கூரம்பட்டி சேத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவரான மதியழகன் (32) என்பவர் தனது மனைவி மற்றும் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>