உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 2 குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசு ஆணை

 

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக 2 வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், சிவில் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர்கள், அரசு பிளீடர்கள் உள்ளிட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தவெக வழக்கறிஞர்கள் அணியிலிருந்து புதிய அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக நேற்று 5 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் பரிந்துரையின் அடிப்படையில் டி.லெனின் குமார், டி.வெங்கடேஷ் ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் மணிவாசன் ஆணை பிறப்பித்துள்ளார்.

 

Related Stories: