தமிழகம் முழுவதும் கல்குவாரிகளில் சோதனை: கனிமவளத்துறை அமைச்சர் பிரபு உத்தரவு

 

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த கனிமவளத்துறை அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் பிரபு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் முழுவதும் கனிமவளத் துறை சார்பில் 3000க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. அனுமதித்த அளவுக்கும் மேலாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.

அதே போல, ஒன்றிய அரசின் சிபா கமிட்டி விதிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, கல்குவாரிகளில் அரசிடம் பெறப்பட்ட ஆணைப்படி கற்கள் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்த கல்குவாரிகளை உடனடியாக மூடவும், அபராதம் வசூலிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: