×

ஒரே நாடு ஒரே தேர்தலால் ரூ.7 லட்சம் கோடி சேமிப்பு: கூட்டுக்குழு தலைவர் தகவல்

 

காந்திநகர்: ஒரே நாடு ஒரே தேர்தலால் ரூ.7 லட்சம் கோடியை சேமிக்கலாம், அதை மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் என நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான 129வது அரசியலமைப்பு திருத்த சட்டம் உட்பட 3 மசோதாக்களை பி.பி.சவுத்ரி தலைமையிலான 41 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. இக்குழு குஜராத்திற்கு 3 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இதில் அனைத்து துறையினருடன் ஆலோசனை நடத்திய இக்குழு, இந்த ஆலோசனை தொடர்பான விரிவான அறிக்கை சமர்பிக்க மாநில தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் பி.பி.சவுத்ரி அளித்த பேட்டியில், ‘‘குஜராத்தின் அறிக்கையை நாட்டின் பிற மாநில அரசுகளும் முன்மாதிரியாக பின்பற்றி, தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க உதவும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், ரூ.7 லட்சம் கோடியை சேமிக்கலாம். அந்த பணத்தை உள்கட்டமைப்பு மேம்பாடு, ஏழைகளின் நலன், கல்வி, சுகாதாரம், பிற பொதுநல பணிகளுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என பொருளாதார வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் சீர்த்திருத்தங்கள் நாட்டிற்கு பயனளிக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை’’ என்றார்.

குஜராத் ஆதரவு
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முன்மொழிவை ஆராய்ந்து வரும் கூட்டு நாடாளுமன்ற குழுவை குஜராத் முதல்வர் புபேந்திர படேல் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை மாநில அரசு முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.

Tags : Joint Committee ,Gandhinagar ,Parliamentary ,Joint ,Committee ,P.P. Chowdhury ,Lok Sabha ,
× RELATED ‘புஷ்பா’ எனக்கூறி ஐபிஎஸ் அதிகாரிக்கு...