திருவனந்தபுரம்: கேரளத்தின் 13வது முதல்வராக வி.டி. சதீசன் கடந்த 18ம் தேதி பதவியேற்றார். இவருடன் 20 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இந்நிலையில் முதல்வர் வி.டி. சதீசனின் கூடுதல் செயலாளர் மற்றும் சிறப்புப் பணி அதிகாரியாக என்.எஸ்.கே உமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர் 2015ம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கடந்த 2023 முதல் 2025ம் ஆண்டு வரை எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக இருந்த இவர்,
வயநாடு மாவட்ட சப் கலெக்டர், தலைமைச் செயலாளரின் சிறப்பு அதிகாரி, பொதுக் கல்வித்துறை இயக்குனர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது மனைவி விக்னேஷ்வரியும் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டராக இருந்த இவர் தற்போது திருவனந்தபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குனராக உள்ளார்.
