×

மேற்கு வங்கத்தில் எல்லை வேலி அமைப்பதற்கான இடம் ஒப்படைப்பு

 

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி சர்வதேச எல்லை வேலி அமைப்பதற்கான இடத்தை எல்லைப்பாதுகாப்பு படையிடம் நேற்று ஒப்படைத்தார். மேற்கு வங்கத்தில் சர்வதேச எல்லை வேலி அமைப்பதற்கும், பாதுகாப்பு உள்கட்டமைப்பிற்கும் தேவைப்படும் நிலத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் முதல் கட்டமாக இந்தியா- வங்கதேசம் சர்வதேச எல்லையோரம் அமைந்துள்ள 27கி.மீ. நீளமுள்ள பகுதிக்கு தேவையான நிலத்தை எல்லைப்பாதுகாப்பு படையிடம் முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்படைத்தார்.

மாநிலத்தில் எல்லை மேலாண்மையை வலுப்படுத்தத் தேவைப்படும் இடங்களில் எல்லாம் கூடுதல் நிலம் வழங்கப்படும். இது பரந்த செயல்முறையின் முதல் படியாகும். மேற்கு வங்கத்தில் வங்கதேசத்துடன் அமைந்துள்ள மொத்தம் 2200 கி.மீ. எல்லைப் பகுதியில் சுமார் 1600கி.மீ. தூரத்திற்கு ஏற்கனவே வேலி அமைக்கப்பட்டுவிட்டது. ஏறக்குறைய 600கி.மீ. தூரம் இன்னும் வேலி அமைக்கப்படாமலே உள்ளது” என்றார்.

Tags : West Bengal ,Kolkata ,Chief Minister ,Suvendu Adhikari ,International Border Fence ,Border Security Force ,West Bengal.… ,
× RELATED ‘புஷ்பா’ எனக்கூறி ஐபிஎஸ் அதிகாரிக்கு...