வெங்கமேடு பெரியகுளத்துப்பாளையம் அரசு பள்ளிக்கு செல்லும் சாலையில் குழாய் உடைப்பால் தண்ணீர் தேக்கம்

கரூர், மார்ச். 3: கரூர் வெங்கமேடு பெரியகுளத்துப்பாளையம் அரசுப் பள்ளிக்கு செல்லும் சாலையில் குடிநீர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேக்கம் காரணமாக வாகனஓட்டிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.இந்த பள்ளிக்கு செல்லும் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து பள்ளியை நோக்கி சென்ற வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நடந்தும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கசிவை விரைந்து சரி செய்ய தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>