லாரி டிரைவரிடம் மிரட்டி பணம் பறிப்பு ஒருவர் கைது: இருவர் தப்பி ஓட்டம்

அரவக்குறிச்சி, மார்ச் 3: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து திருப்பூருக்கு பார்சல் லாரி சென்றது. தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி தடாகோவில் அடுத்த ஒரு ஓட்டல் அருகே லாரிடிரைவர் மனோஜ் (34) லாரியை நிறுத்தி விட்டு காலைக்கடன் கழிக்க சென்ற போது திடீரென மறைவாக இருந்த 3 மர்ம நபர்கள் டிரைவரை மிரட்டி பின்புறமாக கட்டி பிடித்து கொன்றுவிடுவதாக மிரட்டி சட்டைப்பையில் வைத்திருந்த ரூ. 700 ஐ பறித்துக் கொண்டனர்.

அதில் மற்றொருவர் லாரியில் ஏறி மேலும் பணத்தை தேடும்பொழுது, லாரி டிரைவர் மனோஜ் தன்னைப் பிடித்திருந்த இருவரை கீழே தள்ளி விட்டு சத்தம் போடும் போது, இருவர் அருகேயிருந்த காட்டுக்குள் ஓடி தப்பித்தனர். லாரியில் ஏறி பணத்தை தேடிய திண்டுக்கல் மாவட்டம் பெரிச்சி பாளயத்தைச் சேர்ந்த மணியன் (24) பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றபோது அவரை பிடித்து அரவக்குறிச்சி காவல்நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>