×

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மகாராஷ்டிராவில் பயிற்சி மைய நிறுவனர் கைது

 

புதுடெல்லி: நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவின் லடூரில் ரேணுகா கேரியர் சென்டர் என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் நடத்திய வந்தவரான சிவராஜ் ரகுநாத் மேட்டோகான்கர் என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது அவரது செல்போனில் கசிந்த நீட் வினாத்தாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் இணைந்து நீட் தேர்வுக்கு முன்னதாக சுமார் 10 நாட்களுக்கு முன் ஏப்ரல் 23ம் தேதி சிவராஜ் வினாத்தாள் மற்றும் அதற்கான விடையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் வினாத்தாள் கசிவு வழக்கு குறித்து ஆய்வு செய்வதற்காக என்டிஏ தலைவர், அதிகாரிகளுக்கு அழைக்க கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு குழு முடிவு செய்துள்ளது.

Tags : NEET ,Maharashtra ,New Delhi ,CBI ,
× RELATED மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும்...