×

மும்பை-அகமதாபாத் இடையே இயக்கம்: இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் படம் வெளியீடு

 

புதுடெல்லி: மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ரயில் இயக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

நேற்று இந்த அதிவேக ரயிலின் புகைப்படம், ரயில்வே அமைச்சகக் கட்டிடத்தின் 4வது நுழைவாயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிப் பலகை ரயிலின் வடிவமைப்பைச் சித்தரிக்கிறது. இந்த புல்லட் ரயில், இந்தியாவின் முதல் அதிவேக ரயில் சேவையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Mumbai- ,Ahmedabad ,India ,New Delhi ,Mumbai ,
× RELATED மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும்...