தவெக பெண்கள் குறித்து அவதூறு பொன்ராஜ் மீது 4 பிரிவில் வழக்கு

 

கடலூர்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது கடந்த மார்ச் மாதம் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், தவெக பெண் நிர்வாகிகள், ரசிகைகளை அவதூறாக பேசியதாக அவர் மீது கடலூர் எஸ்.பி அலுவலகம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் தவெகவினர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் சைபர் குற்றப்பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பொன்ராஜ் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: