மொடக்குறிச்சி: திருச்செங்கோடு அவிநாசிபட்டி மாந்தோப்பு காலனியை சேர்ந்தவர் பெருமாள் (35). இவரது மனைவி பாரதி (34). இவர்களது மகன்கள் லகித் (14), சுஜித் (12). பாரதியின் தாய் வீடு பரமத்திவேலூர் சித்தம்பூண்டியில் உள்ளது. கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் அவர்கள் அங்கு சென்றிருந்தனர். அங்கிருந்து அவர்கள் நேற்று மதியம் கொடுமுடி அருகே பாசூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.
இவர்களுடன் சித்தம்பூண்டியை சேர்ந்த சேகர் மகளான பிரதீபா (21), அவரது தோழியான ஸ்ரீமதி ஆகியோரும் குளிக்க வந்துள்ளனர். ஆற்றில் குளித்தபோது பிரதீபா, பாரதி, லகித், சுஜித் ஆகியோர் நீரில் மூழ்கினார். அவர்களை காப்பாற்ற முயன்ற பெருமாளும் நீரில் மூழ்கினார். இதில், பெருமாள் மற்றும் அவரது மனைவி பாரதி, பிரதீபா ஆகியோர் உயிரிழந்தனர்.
