×

ஈராக் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஈராக்கின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள அலி பாலிஹ் காதிம் அல் ஜைதிக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈராக்கின் பிரதமராக அல் ஜைதி பொறுப்பேற்றுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ஈராக்கின் பிரதமராக பொறுப்பேற்ற அலி பாலிஹ் காதிம் அல் ஜைதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஈராக்குடன் இந்தியா கொண்டுள்ள நீண்ட கால மற்றும் நட்பு ரீதியான உறவுகளை மிகவும் மதிக்கிறது. மேலும் அனைத்து துறைகளிலும் நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இரு நாடுகளின் கூட்டு முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

Tags : Modi ,Prime Minister of ,Iraq ,New Delhi ,Narendra Modi ,Ali Balih Qatim al-Zaidi ,Al Jaidi ,site ,Ali ,Prime Minister of Iraq ,
× RELATED வெளிநாட்டு பயணத்திற்கு புதிய வரி...