புதுடெல்லி: வணிகம் மற்றும் தொழில்துறையில் இருக்கும் யாத்ரீகர்கள் வழக்கமான 40 முதல் 45 நாள்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் சிலர் குடும்பத்தினரை விட்டு நீண்டநாள்கள் பிரிந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு குறுகியகால 20 நாள் ஹஜ் யாத்திரையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
