- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- விஜய்
- ஆந்திரப் பிரதேசம்
- துணை முதலமைச்சர்
- பவன் கல்யாண்
- திருமலை
- Janasena
- மங்களகிரி, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
திருமலை: அடிமட்டத்தில் இருந்து உயர் பதவிக்கு வந்தவன் நான். தமிழக முதல்வர் விஜய்யுடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் பேசினார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் தனது கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் ஆந்திர துணைமுதல்வருமான பவன்கல்யாண் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நடிகர் ஜோசப் விஜய் கட்சியை ஆரம்பித்து 2 ஆண்டுகளில் தனித்து நின்று தற்போது முதல்வராகிவிட்டார். அவர் தமிழக அரசியலில் புதிய சாதனையை படைத்து அரியணை ஏறியுள்ளார். அதேபோன்று நானும் செய்திருக்கலாம் என பலதரப்பினரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக எனக்கு தினசரி மெசேஜ்களை அனுப்பிக்கொண்டே உள்ளனர். இதற்கு நான் கட்டாயம் பதிலளித்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை ஆந்திர அரசியல் வேறு, தமிழக அரசியல் களம் வேறு.
கடந்த 2007ம் ஆண்டிலேயே எம்பியாக போட்டியிட தேசிய ஜனநாயக கூட்டணியில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால் நான் ஏற்க மறுத்துவிட்டேன். அதற்கு காரணம் அரசியல் களத்தில் அடிமட்டத்தில் இருந்து அனைத்து அனுபவங்களையும் பெற்று படிப்படியாக உயர் பதவிக்கு வரவேண்டும் என்ற சிந்தனையோடுதான் போராடினேன். கடந்த 2019ல் தனித்து போட்டியிட்டேன்.
எனது பலத்தை அறிய முடிவு செய்து 2 தொகுதிகளில் களம் இறங்கினேன். ஆனால் இருதொகுதிகளிலும் தோல்வியடைந்தேன். என்னுடன் இருந்த கட்சியினரும் என்னைவிட்டு விலகிவிட்டனர். இருப்பினும் அரசியல் காழ்ப்புணர்ச்சி போன்ற எவ்வளவோ சோதனைகளை கடந்து தற்போது துணைமுதல்வராக உள்ளேன். எனவே தயவுசெய்து தமிழக முதல்வரோடு என்னை யாரும் ஒப்பிட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
