திருமாவளவன் குறித்து அவதூறு; பெண் மீது போலீசில் புகார்

ஈரோடு, மே 16: விசிக தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் புஷ்பலதா மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக செயல்பட்டு வருகிறார். அவர் மீது சமூக வலைத்தளங்களில் சாதிய அடிப்படையில் அவதூறாக பேசி, இழிவுபடுத்தும் வீடியோ பதிவுகளை சோனா என்ற பெண் பரப்பி வருகிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

Related Stories: