ராமேஸ்வரம், மே 15: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இணையதள வசதி இல்லாத மாணவ, மாணவிகள் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள இணையதள சேவை உதவி மையங்கள் மூலம் பதிவு செய்யலாம்.
அதன்படி ராமேஸ்வரம் அப்துல்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 7ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான சேவை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லூரியில் செயல்படும் உதவி சேவை மையத்தை பயன்படுத்திக் கொள்ள கல்லூரியின் முனைவர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
