தேனி என். ஆர். டி நகரில் சிறப்பு ரத்த தான முகாம்

தேனி, மே 15: தேனியில் உள்ள என்.ஆர்.டி. நர்சிங் கல்லூரியில், தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தேனி என்.ஆர்.டி.நர்சிங் கல்லூரி மற்றும் தேனி அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமினை என்.ஆர்.டி. நர்சிங் கல்லூரியின் தாளாளர் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் துவக்கி வைத்தார்.

ரெட் கிராஸ் துணை சேர்மன் மகாராஜன், செயலாளர் சுருளிவேல், உறுப்பினர்கள் காமராஜ், சரவணகுமார், என்.ஆர்.டி. நர்சிங் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி ஹேமா, கல்லூரி முதல்வர் விஜய் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் மருத்துவர் பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர். இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்த தானம் அளித்தனர். ரத்த தானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

Related Stories: