சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சி.ஜோசப் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரே நபர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஏதேனும் ஒரு தொகுதியை மட்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதால், அவர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது: ஜோசப் விஜய் மே 10ம் தேதி சபாநாயகருக்கு தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அந்த ராஜினாமாவை சட்டப்பேரவை தலைவர் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 190(3)(பி) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி ஏற்றுக்கொண்டதாகவும், இதனையடுத்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மே 10ம் தேதி முதல் காலியானதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
