மக்களை ஏமாற்றும் விஜய் அரசின் செயல்பாடு எமாற்றம் அளிக்கின்றது: ஜவாஹிருல்லா

சென்னை: பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை காப்பாற்ற தவறி மக்களை ஏமாற்றும் விஜய் அரசின் செயல்பாடு எமாற்றம் அளிக்கின்றது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தேர்தல் காலத்தில் தமிழக மக்களிடம் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ள விஜய் அரசு, தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டும் சுணக்கம் ஏமாற்றம் அளிக்க்கின்றது குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று மிகப்பெரிய அளவில் அறிவித்து வாக்குகளை பெற்ற அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து எந்த தெளிவான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு, குடும்பச் செலவுகள், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. தேர்தல் மேடைகளில் “மாதம் ரூ.2,500” என்று உறுதி மொழி அளித்தவர்கள், இன்று அந்த வாக்குறுதியை மறந்து பேசுவது அரசியல் நேர்மையற்ற செயலாகும்.

மாதம் ரூ.2,500 வழங்குவதாக அறிவித்து ஆட்சிக்கு வந்த அரசு, திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தம்மட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் நேற்று உறுதி அளித்து விட்டு மகளிர் மெற்று வந்த மாதம் ரூ.1,000 தொகையை
கூட வழங்க மறுப்பது எந்த வகையிலான நிர்வாகம்?

பெண்களின் பொருளாதார முன்னேற்றம், குடும்ப நலன், குழந்தைகளின் கல்வி, அன்றாட வாழ்க்கை ஆகியவற்றோடு நேரடியாக தொடர்புடைய இந்த திட்டத்தில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது. பெண்களை தேர்தல் கால வாக்குறுதிகளின் மூலம் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அவர்களின் நம்பிக்கையை சிதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. என அவர் கூறியுள்ளார்.

Related Stories: