நைனாமலை வனப்பகுதியில் திடீர் தீ

மரங்கள் எரிந்து சாம்பல்சேந்தமங்கலம், மார்ச் 2: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அடுத்துள்ள நைனாமலை அடிவாரம் மூலக்காடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீ மளமளவென வனப்பகுதியில் பரவத்தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், நாமக்கல் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வன ஊழியர்கள், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வனப்பகுதியில் 10 ஏக்கருக்கு மேல் தீயில் எரிந்து மரங்கள் சாம்பலானது. இதுகுறித்து வன அலுவலர்கள் நடத்திய விசாரணையில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் வைத்த தீ, அருகில் உள்ள வனப்பகுதியில் பரவியது தெரியவந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>