அரசு கல்லூரியில் கருத்தரங்கம்

நாமக்கல்,  மார்ச்2: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு  கலைக்கல்லூரியின் உள்தர உறுதி மையம் மற்றும் நூலகம் சார்பில், ஆய்வியலும்  நூலகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி உள்தர உறுதி மைய  ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றார். முதல்வர் முருகன் தலைமை  வகித்து நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். நூலகர் ராஜ்குமார்,  நூலகம் எந்தெந்த வகையில் எல்லாம் உதவுகிறது என்பது குறித்து பேசினார்.  இதில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். வணிகவியல் உதவி பேராசிரியர்  செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories:

>