புதுடெல்லி: சமீபத்திய குஜராத் மற்றும் அசாமில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி உலகளாவிய எரிசக்தி நிலைமை குறித்த கவலைகளை வெளிப்படுத்தினர், இதன்பின்னணியில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யவும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும் வலியுறுத்தினார்.
கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கற்பிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எரிபொருட்களை சேமிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ வாகன அணிவகுப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளார். இந்த நடவடிக்கை, மாநிலங்கள் பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியாக தற்போது முன்னிறுத்தப்படுகிறது. பிரதமரின் குஜராத் மற்றும் அசாம் பயணங்களின்போது இந்த குறைக்கப்பட்ட வாகன அணிவகுப்பு ஏற்பாடு செயல்படுத்தப்பட்டது.
குடிமக்களுக்குப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்திய நடவடிக்கைகளை, பிரதமரே தனிப்பட்ட முறையில் செயல்படுத்தத் தேர்ந்தெடுத்ததால், அவரது வாகன அணிவகுப்புடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போது பிரதமர் மோடி இந்த வேண்டுகோளை விடுத்த நிலையில் , தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார், அவர் வதோதரா மற்றும் குவஹாத்திக்குச் சென்றபோதும் இந்த பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
