தேன்கனிக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அன்னதானம் தேன்கனிக்கோட்டை,

மார்ச் 2: தேன்கனிக்கோட்டையில், பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையத்தில், பட்டாசு வெடித்து, அன்னதானம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேரூர் அவைத்தலைவர் வெங்கடசாமி, துணை செயலாளர் சக்திவேல், நஞ்சப்பன், பொருளாளர் அப்துல்கலாம், நாகராஜ், ஸ்ரீதர், ராமன், சையத்பாஷா, கிருஷ்ணன், மணிவண்ணன், லிங்கோஜிராவ், குண்டப்பா, மஞ்சு, முரளி, நாசீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தளியில் நடைபெற்ற விழாவில், தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் முனிராஜ், கங்கப்பா, மாதேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>