அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: ரூ.95.31 ஆனது

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று ரூ.95ஐ கடந்து வரலாறு காணாத புதிய சரிவை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபராக 2வது முறையாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, வரி விதிப்பு உள்ளிட்ட வர்த்தக ரீதியாக அவர் எடுத்த பதிலடி நடவடிக்கைகள் இந்திய ரூபாய் மதிப்பை வெகுவாக பாதித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.49 ஆக இருந்தது. வர்த்தக இடையில் ரூ.94.87 ஆகவும், ரூ.95.34 ஆகவும் இருந்தது. வர்த்தக முடிவில், முந்தைய நாளை விட 82 காசுகள் சரிந்து ரூ.95.31 ஆனது.

Related Stories: