சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்குரூ.1,440 குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் போர் காரணமாக தங்கம் விலை அதிரடி சரிவை கண்ட பிறகு ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. அதேபோல், இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, தங்கம் கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,820-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
