சென்னை: கடந்த 5ம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை காலை, மாலை என 2 முறை அதிரடியாக உயர்ந்தது. அதாவது நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,050க்கும், பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12.400க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14100க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12800க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் காலை, மாலை என பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்து அதிர்ச்சி வைத்தியம் படைத்தது.
இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்றையதினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,150க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13200க்கும் விற்றது. வெள்ளி விலையில் நேற்று மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.275க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
