புதுடெல்லி: கடந்த 2025-26 நிதியாண்டில், ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில், அதிக வரி கட்டிய தனி நபராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி உருவெடுத்துள்ளார். பீஹார்-ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் இத்தகவலை ராஞ்சியில் நேற்று தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘கடந்த 2025-26 நிதியாண்டில், பீகார்-ஜார்க்கண்ட் மாநிலங்களில் மொத்தமாக 20,000 கோடி ரூபாய் வரி வசூலானது. அதில், 12,000 கோடி ரூபாய் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கிடைத்தது’ என்றார்.
