திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கொடியேற்றி, நலஉதவி வழங்கும் விழா

திருச்சி, மார்ச் 1: திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் தமிழர் எழுச்சி நாள் விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி ஒன்றிய, நகரம், பேரூர் கழகங்களில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையின் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடக்கிறது. மருங்காபுரி வடக்கு ஒன்றியத்தில் காலை 7.30 மணிக்கு பிராம்பட்டி, 8 மணிக்கு மருங்காபுரி தெற்கு ஒன்றியம் தாழம்பாடி ஊராட்சி சமத்துவபுரம், 8.30 மணிக்கு பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி அண்ணா பேருந்து நிலையம், 9 மணிக்கு வையம்பட்டி ஒன்றியம் வையம்பட்டி டவுன் பகுதியில் விழா நடக்கிறது. காலை 9.30 மணிக்கு மணப்பாறையில் உள்ள கோவில்பட்டி சாலை, 10 மணிக்கு உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள பஞ்சுமில் கேட் பகுதி, 11 மணிக்கு நவல்பட்டு ஊராட்சியில் உள்ள நவல்பட்டு, 11.30 மணிக்கு துவாக்குடி நகராட்சி பெரியார் திடல், 12 மணிக்கு கூத்தைப்பார் பேரூராட்சி ஜெய்நகர், 12.30 மணிக்கு திருவெரும்பூர் வடக்கு ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரத்தில் விழா நடக்கிறது. மாலை 4 மணிக்கு காட்டூர் பகுதி முருகன் கோயில் தெரு, மாலை 4.30 மணிக்கு மலைக்கோட்டை பகுதி கல்யாணசுந்தரம் சிலை அருகில், 5 மணிக்கு பாலக்கரை பகுதி பெரியார் நகர், 5.30 மணிக்கு கலைஞர் நகர் பகுதி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு, 6 மணிக்கு பொன்மலை பகுதி மேலகல்கண்டார்கோட்டையில் விழா நடக்கிறது. இதில் நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றியம், கழக அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி வார்டு, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Related Stories:

>