புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தர்ணா போராட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 1: புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தர்ணா போராட்டம் 7 இடங்களில் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் 7 இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைறெ–்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி பாரூக் முகம்மது தலைமை தாங்கினார். இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். என்.ஆர்.சி, என்.பி.ஆர் உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்தக்கூடாது.

தமிழக அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த தர்ணா போராட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை டவுன் போலீசார் திலகர் திடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அறந்தாங்கி: அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத்தினை திரும்பபெற வலியுறுத்தி தர்ணா நடந்தது. மாவட்ட செயலாளர் மீரான் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஹாரிஸ், கிளை தலைவர் சலீம், கிளை செயலாளர் சேக் முன்னிலை வகித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அறந்தாங்கி டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: